நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று ரமலான் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கை இழந்த சந்துரு என்ற கல்லூரி மாணவனுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியாக வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், ''கலைஞர் காலம் முதலே திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தில் இருந்து அதற்கு முன்னதாக 41 சதவீதமாக இருந்த பயணிகள் பயணம் தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தால் ஒருநாளைக்கு அரசுக்கு 6 கோடி ரூபாய் இழப்புதான். எனினும் இலவச பேருந்து பயணம் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது.
திமுக பெண் கவுன்சிலர்கள் கணவன் சொன்னாலும் கேக்காமல் இரவு 12 மணிக்கு கூட மக்கள் பணி செய்கிறார்கள். 1 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்ட மறைந்த நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். அப்படியொரு நடிகரான விவேக் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என கொடுத்த மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டார். வரும் மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது'' எனப் பேசினார்.
இதையும் படிக்கலாம்: 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல்' - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்