சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிகளுக்கு கேமரா தேவை என வாடகைக்கு எடுத்து ஸ்டூடியோ நிறுவனங்களிடம் மோசடி செய்த இரண்டு பெண்களை பாதிக்கப்பட்டவர்களே காவல்துறையிடம் பிடித்து கொடுத்ததால் பரபரப்பு ஏறபட்டது.
சென்னை சாலிகிராமத்தில் ஏ.எஸ்.கே ஸ்டூடியோ நடத்தி வருபவர் ஐயப்பன். இவர் கடந்த மாதம் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னிடம் கேமரா வாடகைக்கு வேண்டும் எனக்கூறி 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மற்றும் லென்ஸ்களை வாங்கிச் சென்றுவிட்டு சுபா என்கிற சுமங்கலி, லட்சுமி தேவி என்ற இரு பெண்கள் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். காவல்நிலையத்தில் அவர் புகார் அளிக்கும்போதெ இந்தப் பெண்கள் மோசடியில் ஈடுபடுபவர்கள் என்பது காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஸ்டூடியோ வைத்து கேமராக்களை வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில், மோசடி பெண்கள் இருவர் குறித்த பதிவை புகைப்படத்துடன் ஐயப்பன் போட்டுள்ளார்.
இந்தப் பதிவை வாட்ஸ்அப் குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்களில் சிலர் பார்த்துவிட்டு, தாங்களும் இதுபோன்று கேமராவை இழந்துள்ளதாக அடுத்தடுத்து பதிவுகளை போட்டுள்ளனர். இவ்வாறாக 10க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள கேமராக்களை சுமங்கலி மற்றும் லட்சுமி இருவரும் ஏமாற்றி வாங்கிச் சென்றது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கே.கே நகரில் உள்ள மற்றொரு ஸ்டூடியோவில் இரண்டு பெண்கள் கேமரா வாடகைக்கு கேட்டுள்ளனர். அப்போது வாட்ஸ்அப் பதிவு மூலம் உஷாரான ஸ்டூடியோவின் உரிமையாளர் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவலர்களுக்கு தகவல் கொடுத்து கையும் களவுமாக சுமங்கலி மற்றும் லட்சுமி தேவி ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
விசாரணை செய்ததில் சுமங்கலி பி.டெக் படிப்பை முடித்துவிட்டு விவாகரத்தாகி தனியாக வாழ்ந்து வருவதும், லட்சுமி என்ற பெண் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதும் தெரியவந்தது. சுமங்கலி மற்றும் லட்சுமி ஆகியோர் பல நபர்களை வேலைக்கு சேர்த்துகொண்டு மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது. மேலும் பலே கில்லாடிகளாக இந்த இரண்டு பெண்களும் நூதன முறையில் பல ஸ்டூடியோக்களில் கேமராவை வாடகைக்கு எடுத்து மோசடி செய்ததும் தெரியவந்தது. குறிப்பாக சுமங்கலி மற்றும் லட்சுமி சினிமா நிகழ்ச்சிகளில் மீடியாவில் வேலை பார்ப்பதுபோல் பலரிடம் பழகி நட்பை வளர்த்துக்கொண்டு, அவர்கள் மூலமாக கேமரா பற்றிய பல்வேறு தொழில்நுட்ப தகவல்களை தெரிந்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.
அவ்வாறு பழக்கமான நபர்களிடம் குறும்படத்திற்காகவும், சினிமா பிரபலங்களின் நிகழ்ச்சிக்காகவும் கேமராக்கள் வாடகைக்கு யாரும் கொடுக்கிறார்களா எனக் கேட்டு தகவல் சேகரித்து, அதன்பின் அவர்கள் பெயரை பயன்படுத்தி கேமரா வாடகைக்கு விடும் ஸ்டூடியோ நிறுவனங்களை அணுகி விலை உயர்ந்த கேமராக்கள் மற்றும் லென்சுகளை இந்தப் பெண்கள் வாடகைக்கு பெற்று மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. கேமராவை பெற்றவுடன் குரோம்பேட்டையில் உள்ள சரத் என்பவரிடம் குறைந்த விலையில் கேமரா மற்றும் லென்சுகளை இவர்கள் விற்று வந்ததும் தெரியவந்தது.
மோசடி செய்த பணத்தில் சுமங்கலி மற்றும் லட்சுமி இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே சுமங்கலி மீது சேத்துப்பட்டு, அசோக் நகர் உட்பட பல காவல் நிலையங்களில் இதேபோன்ற மோசடி வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், சினிமாவில் தெரிந்த நபர்கள் மூலமாக இந்த 2 பெண்களும் கேமராவை வாடகைக்கு கேட்பதால், அதனை நம்பி ஸ்டுடியோ நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் கேமராக்களை கொடுத்துள்ளனர். கேமராவை கொடுக்கும்போது பெண்கள் இருவரும் பல ஆவணங்களை கொடுத்து குறைந்த பட்சம் பத்து நாளைக்கு வாடகைக்கு எடுத்துச் செல்வதாக ஸ்டூடியோ நிறுவனம் நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் 4,5 நாட்கள் கேமராவிற்கான பணத்தை கொடுத்து இரண்டு பெண்களும் நிறுவனத்தின் நம்பிக்கையை பெறுகின்றனர். அதன்பின் மேலும் சில நாட்கள் கேமராக்கள் வாடகைக்கு தேவைப்படுகிறது எனவும், மேலும் சில விலை உயர்ந்த கேமராக்களையும் வாடகைக்கு வாங்கிச்சென்றதாகவும் ஸ்டுடியோ நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திடீரென பெண்கள் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு வந்து கேமராக்கள் காணாமல் போய் விட்டதாக கூறிவிட்டு, இதுதொடர்பாக தாங்களே கேமராவை கண்டுபிடித்து தருவதாகவும் இல்லையெனில் அதற்கான பணத்தை கொடுப்பதாகவும் பெண்கள் கடிதம் எழுதிக் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பி காத்திருந்து தங்களைப் போன்ற பலரும் தனித்தனியாக ஏமாந்து உள்ளதாக ஸ்டூடியோ நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சினிமா செய்திகளை தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் நிகழ்ச்சிகள் இருப்பதாக கூறி கேமராக்களை வாடகைக்கு எடுத்தது தெரியவந்துள்ளது. இறுதியாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வீட்டு திருமண நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டு அதற்கு கேமரா தேவை என கூறி கேமரா வாங்கி சென்று ஏமாற்றியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று எத்தனை பேரை ஏமாற்றியுள்ளனர் என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாடகைக்கு வாங்கி சென்ற கேமராக்களை சரத்திடம் இருந்து மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்