நயன்தாராவை நாயகியாக வைத்து படம் ஒன்றை தோனியின் தயாரிப்பு நிறுவனம் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் படத் தயாரிப்பு நிறுவனமான “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நடிகை நயன்தாராவை நாயகியாக வைத்து படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. தோனியின் விளம்பரப் படம் ஒன்றை நயன்தாராவின் வருங்கால கணவர் விக்னேஷ் சிவன் இயக்கியதால், இந்த முடிவை படத் தயாரிப்பு நிறுவனம் எடுத்திருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இத்தகவலை முற்றிலுமாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது “தோனி எண்டர்டெயின்மெண்ட்” நிறுவனம்.
அந்த அறிக்கையில் “தற்போது சஞ்சய் என்ற நபருடன் எந்த படத் தயாரிப்பு பணியிலும் நாங்கள் ஈடுபடவில்லை. சஞ்சய் என்ற பெயரில் நாங்கள் யாரையும் பணியமர்த்தவில்லை. அந்த பெயரில் வெளியாகும் போலியான தகவல்களை யாரும் நம்பவேண்டாம். இருப்பினும் சுவாரஸ்மான திரைப்படங்களை எடுப்பதற்கான பணிகளில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். படத் தயாரிப்பு உறுதியான பின், அதிகாரப்பூர்வமாக நாங்கள் அறிவிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது சஞ்சய் என்ற பெயரில் வெளியாகும் தகவல்களை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. அத்துடன், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்ற தொணியில் அறிக்கை உள்ளது. அதனால், நிச்சயம் விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்