Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதைவிட யாருக்கும் அடிபணியாத அரசு: அமைச்சர் சேகர்பாபு

தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதைவிட யாருக்கும் அடிபணியாத அரசு என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம். மனிதனை மனிதன் சுமக்கும் இந்த பட்டிணப் பிரவேசம் பல்லக்குத் தூக்கும் நிகழ்வுக்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

image

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குரு முதல்வர் குருபூஜையையொட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச்செல்வதற்கு பிறப்பித்த தடை விலக்கிக்கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/uRSAaIH

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்