வெயில் அதிகம் இருப்பதால் தொடக்கப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் நாளை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும், வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருக்கிறார்.
Best and greet என்ற தலைப்பில் செஸ் கிரான்ட் மாஸ்டர் ப்ரக்யானந்தாவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி வேளச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், எனது பள்ளிக்கல்வி துறையில் படிக்கும் மாணவர் பிரக்யானந்தா என்பது பெருமையாக உள்ளது. அவர் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ஆவேன் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த பொறுப்பில் இருக்க முழுமையான ஒத்துழைப்பு மூலம் சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு தான் காரணம். அதே போல் பிரக்யானந்தாவும் சதுரங்கத்தில் சாதித்துக்கொண்டு இருக்கின்றார். எனக்கு பெருமையே எனது மாணவ - மாணவியர் செல்வங்கள் என்று தான் சொல்வேன். சென்னையில் நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண அனைவரும் வர வேண்டும். குழந்தைகளை செஸ் மாதிரியான மூளையின் செயல்திறனை மேம்படுத்தும் விளையாட்டுகளை கற்க செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து கோடை விடுமுறை குறித்து கேட்டபோது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றும், தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது குறித்து நாளை முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்