“அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேற்கு தொகுதியில் ரூ.37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தவர்,
“கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லையில் உள்ள கல்குவாரிக்கு அனுமதி கேட்டனர். அதை ஆராய்ந்து பார்த்ததில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்த குவாரிக்கு அதிமுக அரசு அனுமதி தரவில்லை. ஆனால், தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கல்குவாரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது. அதன் காரணமாக தான் தற்போது விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.
தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது குறித்து கேட்டதற்கு, “தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லை. அமைச்சர் பணிக்கு தமிழில், எழுத படிக்கத் தெரிந்தாலே போதும். துறையை சிறப்பாக உன்னிப்போடு, அர்பணிப்போடு திறம்பட செய்தாலே போதும். அகில இந்திய கட்சிகளை பொருத்தவரை மத்தியில் ஆளும்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை செல்வாக்கு உள்ள கட்சி போல மாயை தோன்றும்.
ஆனால், தேர்தல் என வந்து விட்டால் தமிழக திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே சில சீட்டுகளை பெறமுடியும். தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள்தான் தமிழகத்தை ஆளும்” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/ju91Qda“அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்