இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக வரும் செய்திகளை, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராஜபக்ச, திரிகோணமலையில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில அரசியல் தலைவர்களும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளது.
இதேபோல, எந்த நபரையும் சட்டவிரோதமாக அழைத்து செல்லவில்லை என இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரி தெமியா அபிவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும், விமானம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றுள்ள எந்த நபரையும் சட்டவிரோதமாக நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/02H3E6Bஇலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக வரும் செய்திகளை, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள ராஜபக்ச, திரிகோணமலையில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில அரசியல் தலைவர்களும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை என தெரிவித்துள்ளது.
இதேபோல, எந்த நபரையும் சட்டவிரோதமாக அழைத்து செல்லவில்லை என இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரி தெமியா அபிவிக்ரம தெரிவித்துள்ளார். மேலும், விமானம் ஓட்டுவதற்கு உரிமம் பெற்றுள்ள எந்த நபரையும் சட்டவிரோதமாக நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்