'நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்' எனக் கூறியுள்ளார் கே.எல். ராகுல்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 42-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டிக்கு பின்னர் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் அளித்த பேட்டியில், ''முதல் இன்னிங்ஸின் முடிவில் நான் மிகுந்த ஏமாற்றமடைந்தேன், கடும் கோபம் கொண்டேன். நாங்கள் முட்டாள்தனமான பேட்டிங்கை ஆடியுள்ளோம். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
குயின்டன் டி காக் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரும் மிகமிக சிறப்பாக பேட்டிங் செய்தனர். அதைபோல் நாங்களும் சிறப்பாக ஆடியிருந்தால் 180 முதல் 190 ரன்கள் வரை இலக்கு நிர்ணயித்திருக்கலாம். ஆனால் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். க்ருனால் பாண்டியா இந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிவருகிறார். இந்த சீசனில் அவரது பந்துவீச்சு நன்றாக கைக்கொடுக்கிறது. ரன்களை விட்டுக் கொடுக்காமல் பந்து வீசுவது முக்கியம். ஆனால் அவர் விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்துகிறார். ரவி பிஷ்னோயும் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவர் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகள் எடுத்து விட்டார். பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இதே ஆட்டத்தை மீண்டும் செய்ய வேண்டும்'' என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: ஐபிஎல்: கடைசி ஓவரில் அசத்திய ஆவேஷ் கான் - 20 ரன் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்