பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பெங்களூரு ராயல் சேலஞ்ஜர்ஸ் அணியும் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி தரப்பில் டு பிளசிஸ் மற்றுக் கோலி ஆகியோர் ஓப்பனர்களாக களமிறங்கினர். 5 ஓவர்களில் 50 ரன்களை அதிரடியாக கடந்தது ஆர்சிபி. அந்த அணிக்கு வெகு நாட்களுக்கு பிறகு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 50ஐ கடந்தது. இதனைத்தொடர்ந்து அந்த அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும் சீரான வேகத்தில் ரன்கள் உயர்ந்தது. கடைசி ஓவரில் கார்த்திக் இரு சிக்ஸர்கள் விளாசி, 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை தரப்பில் தீக்சனா 3 விக்கெட்டுகளும், மொயின் அலி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர்.
174 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தது. 6 ஓவர்களில் 50 ரன்களை கடந்தபோது ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்த சில நிமிடங்களில் ராபின் உத்தப்பா ஒரு ரன்னோடு அவுட் ஆக, அம்பதி ராயுடுவும் 10 ரன்களோடு ஆட்டமிழக்க சென்னை அணி தத்தளிதத்து.
75 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்கள் இழந்து தடுமாறிய சென்னை அணிக்கு கான்வே மற்றும் மொயீன் அலி இணைந்து சில ஓவர்கள் ரன்களை சேர்த்தனர். 15வது ஓவரில் கான்வே 56 ரன்களுக்கும், 17வது ஓவரில் மொயீன் அலி 34 ரன்களுக்கும் அவுட் ஆக, ஜடேஜா, தோனி உள்ளிட்ட பின்வரிசை வீரர்கள் சோபிக்க தவறினர். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 8 விக்கெட்களை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு தரப்பில் ஹர்சல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நடப்பு தொடரில் 7வது தோல்வியை சந்தித்துள்ள சென்னை அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.
இதையும் படிக்க: ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட சிக்ஸரை விளாசிய சிஎஸ்கே வீரர்! யாரென்று தெரியுமா?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்