Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஐபிஎல்: பழி தீர்த்தது கொல்கத்தா - 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி

https://ift.tt/hNQAMGo

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எளிதில் வெற்றி பெற்றது.

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்க வாழ்வா சாவா போட்டி. என்ற சவால்களுடன் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் இந்த முறை நிதானத்தை கடைபிடித்தார். மற்றொரு தொடக்க வீரர் படிக்கல் 2 ரன்களில் ஆட்டமிழக்க கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமாக ரன்சேர்த்தது. பெரிய ஷாட்களை அடிக்க முடியாத அளவுக்கு கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சு அமைந்தது. நடப்பு சீசனில் அதிக சிக்சர்களை விளைசிய பட்லர் இப்போட்டியில் ஒரு சிக்சர் கூட அடிக்காமல் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய கேப்டன் சாம்சன் 49 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். கடைசி நேரத்தில் ஹெட்மேயர் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்களை ராஜஸ்தான் அணி சேர்த்தது.

image

அடுத்து களம் வந்த கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்கள் பிஞ்ச் 4 ரன்களிலும், இந்திரஜித் 15 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். எனினும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் நிதிஸ் ராணா ஜோடி சேர்ந்து நிதானமாக ரன் சேர்த்தனர். இருவரும் மூன்றாவது விக்கெட்க்கு 60 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயாஸ் 34 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த ரிங்கு சிங் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். இருவரின் நேர்த்தியான ஆட்டத்தால் 19.1 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

image

இத்தொடரில் ஏற்கனவே ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்ததற்கு இந்த வெற்றியின் மூலம் பழி தீர்த்தது கொல்கத்தா அணி. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 4 ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்தில் கொல்கத்தா அணி உள்ளது. மேலும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற அடுத்துவரஉள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் கொல்கத்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: கேப்டன் கூல் தோனியை கோபமடைய வைத்த முகேஷின் “வைடு” பால்! வைரல் வீடியோ!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்