உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை காரணமாக, ஆந்திராவின் திருமலை திருப்பதியில் உள்ள பழமையான வெங்கடாசலபதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை, 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/wtn8mb3உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், 4 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோடை விடுமுறை காரணமாக, ஆந்திராவின் திருமலை திருப்பதியில் உள்ள பழமையான வெங்கடாசலபதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வரிசை, 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு கொண்டே செல்கிறது.
கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதியில் குவிந்துள்ள நிலையில், தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்