நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET - UG தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டுக்கான (2022-2023) நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏற்கனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்டு, நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் சேருவோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இரண்டாம் முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை விண்ணப்பிக்காத பிற தேர்வர்களும் வரும் 20-ம் தேதி இரவு 9 மணிக்குள்ளாக https://neet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணத்தை வரும் 20-ம் தேதி இரவுக்குள்ளாக செலுத்தலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த முறை இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/E0y92w7நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர NEET - UG தேர்வு நடத்தப்படுகிறது. வரும் கல்வியாண்டுக்கான (2022-2023) நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏற்கனவே ஒருமுறை நீட்டிக்கப்பட்டு, நேற்றுடன் முடிவடையவிருந்த நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படை நர்சிங் கல்லூரிகளில் B.Sc., நர்சிங் சேருவோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதுவாக இரண்டாம் முறையாக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை விண்ணப்பிக்காத பிற தேர்வர்களும் வரும் 20-ம் தேதி இரவு 9 மணிக்குள்ளாக https://neet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பக் கட்டணத்தை வரும் 20-ம் தேதி இரவுக்குள்ளாக செலுத்தலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கடந்த முறை நடைபெற்ற நீட் தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த முறை இதுவரை 20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்