தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
தேர்வு மையங்களுக்கு அலைபேசி எடுத்து வர தடை விதிப்பு தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கும் ப்ளஸ் 2 தேர்வுகள், வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இந்தத் தேர்வுகளை 8,37,317 பேர் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள், 4,68,587 பேர் மாணவிகள் ஆவர். ப்ளஸ் 2 தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்கள் தயாராக உள்ளன. தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில், தேர்வறைகள் கிருமிநாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தி, தேர்வு எண்கள் ஒட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இதையும் படிங்க... `தேர்வில் ஆள்மாறாட்டமோ, தவறாக நடந்துக்கொண்டாலோ...’- தேர்வுகள் இயக்குநரகம் கடும் எச்சரிக்கை
காலை பத்து மணிக்குத் தொடங்கும் தேர்வுகள், மதியம் ஒன்றே கால் மணிக்கு நிறைவு பெறும். முதல் பத்து நிமிடங்கள் வினாத்தாளை படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்கள் குறித்த விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் காப்பியடித்தலைத் தடுக்க ஆயிரம் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு அலைபேசி எடுத்து செல்ல அனைவருக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் `தேர்வில் மாணவர் காப்பி அடித்தது உறுதி செய்யப்பட்டால், அவரது விடைத்தாள் திருத்தப்படாது என்றும், ஓராண்டுக்கு தேர்வு எழுத தடைவிதிக்கப்படும்’ எனவும் தேர்வுகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல முறைகேடுகளுக்கு துணை போகும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும் என தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்திருந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/BOv1ljKதமிழ்நாட்டில் ப்ளஸ் 2 எனப்படும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்