Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சிங்கப் பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியன்ஸ்? வெற்றிப் பயணத்தை தொடருமா கேகேஆர்?

https://ift.tt/PzGqMRy

ஐபிஎல் 2022 தொடரில் இன்றைய ஆட்டத்தில் முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் மும்பை அணியும், வெற்றிப் பயணத்தை வீறுநடை போட காத்திருக்கும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் 2022 தொடரில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இந்த சீசனின் புள்ளிப் பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னை அணியை எளிதாக வீழ்த்தியது கொல்கத்தா. 2வது ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அடுத்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தி வெற்றிப்பாதைக்கு திரும்பியது. இதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியையும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அந்த அணி கடுமையாக போராடும்.

IPL 2022: MI vs KKR Head to Head, Preview, Playing XI, Where to Watch Details

ஆண்ட்ரூ ரஸல், ரகானே, சாம் பில்லிங்ஸ், நிதிஷ் ரானா, ஸ்ரேயாஸ் அய்யர் என பலரும் பேட்டிங்கில் தங்கள் பங்களிப்பை அளிப்பதால், பேட்டிங் யூனிட் வலுவாகவே திகழ்கிறது. 3 ஆட்டங்களாக சிறப்பாக விளையாடாமல் இருக்கும் வெங்கடேஷ் அய்யர், சுனில் நரைன் ஆகியோரும் தங்கள் பார்முக்கு திரும்பினால் மும்பைக்கு பெரும் தலைவலியாக கொல்கத்தா உருவெடுக்கும். கொல்கத்தா அணிக்கு இப்போது அசுர பலமாக திகழ்வது பார்முக்கு வந்துள்ள உமேஷ் யாதவின் வேகப் பந்துவீச்சு. மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக உமேஷ் இருப்பார். டிம் சவுத்தி, வருண் சக்கரவர்த்தி என மேலும் பல நட்சத்திர வீரர்களை வைத்திருப்பதால் மும்பையை முடக்கிப்போட கொல்கத்தா கடைசிவரை போராடும் என்பதில் சந்தேகமில்லை.

Image

மும்பை இந்தியன்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவி பரிதாபத்துக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக 177 ரன்கள் குவித்த போதிலும், அவர்களை கட்டுப்படுத்த இயலாமல் தோல்வியை தழுவியது. 2வது ஆட்டத்தில் ராஜஸ்தான் 193 ரன்களை குவிக்க, இலக்கை எட்ட முடியாமல் 170 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. தோல்விப் பயணத்திற்கு முடிவுரை எழுத மும்பை முழு உத்வேகத்துடன் களமிறங்கும். இஷான் கிஷான், திலக் வர்மா ஆகிய இரு இளம் வீரர்களும் மும்பைக்கு நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். பேட்டிங்கில் இருவரும் மிக அபாரமாக விளையாடி வருகின்றனர்.

Image

இவர்களுடன் ரோகித ஷர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடினால், அணி இமாலய ஸ்கோரை தொட்டு நிற்கும். சூர்ய குமார் யாதவ் அணிக்கு திரும்புவார் என்று கூறப்படுகிறது. அப்படி அவர் இணையும் பட்சத்தில், மும்பை அணியின் பேட்டிங் மேலும் வலுவானதாக மாறும். பெற்ற இரு தோல்விகளிலும் மும்பை கோட்டை விட்ட இடம் “பவுலிங்”. ஒரு போட்டியில் சரியாக பந்து வீசியவர்கள் அடுத்த போட்டியில் படுமோசமாக பந்துவீசியதால், நிலையான பவுலிங் லைன் அப்பை கட்டமைக்க இயலாமல் அணி திணறுகிறது. பும்ரா, டைமல் மில்ஸ், முருகன் அஸ்வின் ஆகியோர் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்பதில்தான் மும்பையின் வெற்றி அடங்கியுள்ளது. “Defend low total at any time” என்ற தனது தாரக மந்திரத்திற்கு இந்த போட்டியில் மீண்டும் உயிர் அளிக்குமா மும்பை? இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தெரிய வரும்.

Image

உத்தேச ஆடும் லெவன்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், சிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, வருண் சக்ரவர்த்தி

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அன்மோல்பிரீத் சிங்*, திலக் வர்மா, கீரன் பொல்லார்ட், டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், டைமல் மில்ஸ், ஜஸ்பிரித் பும்ரா, பாசில் தம்பி

*சூர்யகுமார் யாதவ் அணிக்கு திரும்பினால், தொடர்ந்து சொதப்பி வரும் அன்மோல்பிரீத் சிங் அணியில் இருந்து கழற்றிவிடப்படுவார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்