Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சமபலத்துடன் மோதும் லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் - வெல்லப்போவது யார்?

https://ift.tt/TDE9cYX

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள 20-வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் – லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

image

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது.  பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் அணியில் கவனிக்கத்தக்க வீரராக உள்ள ஜோஸ் பட்லர் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்துள்ளார். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் பவுல்ட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

image

நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக இடம்பிடித்துள்ள கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 4 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது. இந்த சீசனில் வலுவான நிலையில் உள்ள லக்னோ, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்புடன் தீவிரமாக ஆடிவருகிறது. பேட்டிங்கில் குயின்டான் டி காக், கேப்டன் லோகேஷ் ராகுல், தீபக் ஹூடோ, பதோனி கைகொடுக்கிறார்கள்.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.  

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, ஆயுஷ் படோனி, கிருஷ்ணப்ப கவுதம், ஜேசன் ஹோல்டர், அவேஷ் கான், ரவி பிஷ்னோய் , துஷ்மந்த சமீரா / ஆண்ட்ரூ டை

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஆர் அஷ்வின், நவ்தீப் சைனி / ஓபேட் மெக்காய், ட்ரெண்ட் போல்ட், கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்

இதையும் படிக்கலாம்: கொல்கத்தாவின் வெற்றி நடையை தடுக்குமா டெல்லி?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்