ஆந்திராவில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் கணவர் உயிரிழந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). அந்தப் பகுதியில் டிடிபி கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை எலக்ட்ரிக் பைக்கை வாங்கியிருக்கிறார். இதையடுத்து, நேற்று இரவு உறங்கும் முன்னர் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை தனது படுக்கையறையில் வைத்து சார்ஜ் செய்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென அந்த பேட்டரி வெடித்து வீடு முழுவதும் தீ பரவியுள்ளது.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் வீட்டில் இருப்பவர்களுக்கு தீப்பற்றியது தெரியவில்லை. இதையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் மீதும் தீப்பற்றியதால் அவர்கள் அலறித் துடித்தனர். இந்த சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வீட்டுக்குள் நுழைந்து அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், சிறிது நேரத்திலேயே சிவக்குமார் உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து விபத்துக்குள்ளாவது தொடர் கதையாக மாறி வருகிறது. இதனால் எலக்ட்ரிக் பைக்கின் விற்பனை பல மடங்கு சரிந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்