அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கம் 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இக்கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் இக்கூட்டத்தில் உரை ஆற்ற உள்ளனர்.
யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்கின்றனர். முன்னதாக அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின் நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
இதையும் படிக்க:32 அடி உயரம், 5 டன் எடை: 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/A9bZQq5அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கு டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
முதலமைச்சர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் கூட்டுக் கருத்தரங்கம் 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இக்கருத்தரங்கை தொடங்கிவைத்து உரையாற்ற உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரும் இக்கூட்டத்தில் உரை ஆற்ற உள்ளனர்.
யோகி ஆதித்யநாத், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், பசவராஜ் பொம்மை, பூபேஷ் பாகல், பிப்லப் தேவ் உள்ளிட்ட முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். தமிழகத்திலிருந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்என் பண்டாரியும் பங்கேற்கின்றனர். முன்னதாக அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளின் மாநாடு நேற்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தங்கள் சீரிய முயற்சியால் ஒரே ஆண்டில் 126 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின் நீதிமன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சட்ட சீர்திருத்தங்கள் உள்ளிட்ட 6 அம்சங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
இதையும் படிக்க:32 அடி உயரம், 5 டன் எடை: 7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் படிமங்கள் கண்டுபிடிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்