உக்ரைனின் துறைமுக நகரமான மரியூபோலில், ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு கொடுமைகளை இழைத்திருப்பதாக அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்களுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய செலன்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பிடம் இருந்து உக்ரைன் மக்களை காக்க வேண்டுமெனில், தங்களுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா மீது கூடுதல் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதிக்க வேண்டும் எனவம் வலியுறுத்தினார். உக்ரைனின் மரியூபோல் நகரில் ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு பல கொடுமைகளை இழைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டினார். அதே நேரம் அது தொடர்பான உறுதியான ஆதாரங்களை செலன்ஸ்கி வெளியிடவில்லை. இதற்கிடையே, மரியூபோல் மக்களின் உயிர் புடினின் கைகளில் தான் இருப்பதாக அந்நகர மேயரும் தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்களுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் அமெரிக்க வந்து சேர்ந்திருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழலில், உக்ரைனுக்காக அமெரிக்கர்கள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், அடைக்கலம் வேண்டுபவர்கள் நேரடியாக ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றும் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அரசு சார்பில் `ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும்’ என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/v2fSF4Vஉக்ரைனின் துறைமுக நகரமான மரியூபோலில், ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு கொடுமைகளை இழைத்திருப்பதாக அந்நாட்டின் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அதேநேரம் போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்களுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் பேசிய செலன்ஸ்கி, ரஷ்ய படையெடுப்பிடம் இருந்து உக்ரைன் மக்களை காக்க வேண்டுமெனில், தங்களுக்கு கூடுதல் ஆயுதங்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்யா மீது கூடுதல் தடைகளை மேற்கத்திய நாடுகள் விதிக்க வேண்டும் எனவம் வலியுறுத்தினார். உக்ரைனின் மரியூபோல் நகரில் ரஷ்ய படைகள் தாங்க முடியாத அளவுக்கு பல கொடுமைகளை இழைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டினார். அதே நேரம் அது தொடர்பான உறுதியான ஆதாரங்களை செலன்ஸ்கி வெளியிடவில்லை. இதற்கிடையே, மரியூபோல் மக்களின் உயிர் புடினின் கைகளில் தான் இருப்பதாக அந்நகர மேயரும் தெரிவித்துள்ளார். போரை நிறுத்தி மக்களை காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்களுக்கு அடைக்கலம் தர தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள் அமெரிக்க வந்து சேர்ந்திருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழலில், உக்ரைனுக்காக அமெரிக்கர்கள் ஒருங்கிணைய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும், அடைக்கலம் வேண்டுபவர்கள் நேரடியாக ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்றும் ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அரசு சார்பில் `ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் அரசுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். உக்ரைன் அரசாங்கத்திற்கு 800 மில்லியன் டாலர்களை ராணுவ உதவியாக வழங்கப்படும்’ என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்