Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஓடிடியில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ - படக்குழு வெளியிட்ட தகவல்

https://ift.tt/Hoqary9

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், வரும் மே 13-ம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

கடந்த 1990-ம் ஆண்டின் துவக்கத்தில், ஜம்மு - காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து தப்பி, நாட்டின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

பிரபல பாலிவுட் இயக்குநரான விவேக் அக்னி ஹோத்ரி இயக்கிய இந்தப் படம், பல்வேறு சட்டப் பிரச்சனைகளை தாண்டி கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில், அனுபம் கெர், விவேக் அக்னி ஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பாஷா சும்ப்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி, மத்தியப் பிரதேசம், கோவா, ஹரியானா, குஜராத், கர்நாடகா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டது.

image

இந்த திரைப்படம் உண்மையை வெளிப்படையாக காண்பிப்பதாக பிரதமர் மோடி படக்குழுவை பாராட்டியிருந்தார். இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி ஆகியோர், தவறாக வழி நடத்துவதாக பிரதமருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஜம்மு - காஷ்மீர் சம்பவம் தொடர்பாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ எனும் திரைப்படம் எடுக்க முடியுமென்றால், லக்கீம்பூர் கேரி சம்பவத்தை வைத்து ‘லக்கீம்பூர் ஃபைல்ஸ்’ திரைப்படம் எடுக்க வேண்டும் என உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். எதிர்ப்புகளை சந்தித்தாலும், இந்தப் படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் புரிந்து சாதனைப் படைத்துள்ளது.

இதையடுத்து, ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் படத்தை இயக்கி வருவதாக, இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம், வரும் மே 13-ம் தேதி, ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக இயக்குநர் விவேக் அக்னி ஹோத்ரி தனது இன்ஸ்டுகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்