Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஐபிஎல்: மண்ணை கவ்விய டெல்லி; அசத்தலாக வெற்றிப்பெற்ற ஆர்சிபி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து மூன்று போட்டிகளில் வென்று அசத்திய பெங்களூரு அணியின் வெற்றிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் முட்டுக்கட்டை போட்ட நிலையில், தற்போது டெல்லியை வீழ்த்தி மீண்டும் புள்ளிக் கணக்கை தொடங்கியுள்ளது ஆர்சிபி. 27ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணியில் டூப்ளசிஸ், ராவத், விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக் அதிரடி காட்ட, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

image

டெல்லி அணியைப் பொறுத்தவரை டேவிட் வார்னர், ரிஷப் பண்ட் மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்கள் சோபிக்காததால் டெல்லி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 173 மட்டுமே எடுத்தது. இதனையடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். புள்ளி பட்டியலில் பெங்களூரு 3ஆவது இடத்தில் உள்ள நிலையில், டெல்லி 8ஆவது இடத்தில் இருக்கிறது.

இதையும் படிக்கலாம்: லக்னோவிடம் தோல்வி! ப்ளே ஆப் சுற்றை விட்டு வெளியேறுகிறதா மும்பை?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/rVLh1bv

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்