ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
நவி மும்பையில் நடைபெற்ற 24ஆவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் மேத்யூ வேட், சுப்மன் கில், விஜய் சங்கர் சொற்ப ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அபினவ் மனோகர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. அபினவ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறத்தில் ஹர்திக் அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அவருடன் அதிரடியாக விளையாடிய மில்லர் 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் சேர்த்தார். முடிவில் 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது குஜராத் அணி.
வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில், ஜோஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தவிர, மற்றவர்கள் ரன்கள் சேர்க்க திணறி சீரிய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இடையில் குறிப்பிடும்படியாக விளையாடிய ஹெட்மயர், 29 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய பெர்குசன் மற்றும் யாஷ் டாயல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/EzdmTpMஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
நவி மும்பையில் நடைபெற்ற 24ஆவது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் மேத்யூ வேட், சுப்மன் கில், விஜய் சங்கர் சொற்ப ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அபினவ் மனோகர் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. அபினவ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபுறத்தில் ஹர்திக் அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் அவருடன் அதிரடியாக விளையாடிய மில்லர் 14 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் சேர்த்தார். முடிவில் 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது குஜராத் அணி.
வெற்றி இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியில், ஜோஸ் பட்லர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 24 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தவிர, மற்றவர்கள் ரன்கள் சேர்க்க திணறி சீரிய இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இடையில் குறிப்பிடும்படியாக விளையாடிய ஹெட்மயர், 29 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணியால் எடுக்க முடிந்தது. இதன்மூலம் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய பெர்குசன் மற்றும் யாஷ் டாயல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்