பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது குறித்த கேள்விக்கு சசிகலா பதில் அளித்துள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சசிகலா, சங்ககிரியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் தரப்பில் பாஜக வளர்ச்சி, அதிமுக - பாஜக கூட்டணி தொடங்கி பொதுச்செயலாளர் பதவிவரை பல கேள்விகள் கேட்கப்பட்டது. அவை அனைத்துக்கும் பதிலளித்துள்ளார் அவர். அந்தவகையில் பொதுச்செயலாளர் பதவிகுறித்து பேசுகையில், “அதிமுக பொதுச்செயலாளர் பதவியை யாரோ நாலு பேர் முடிவு செய்ய முடியாது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கவும் நீக்கவோ முடியும். இது எம்ஜிஆர் வகுத்துத் தந்த திட்டம். அதிமுக, யாராலும் அசைக்க முடியாத கோட்டை. தொடர்ந்து மக்கள் பணி செய்வேன். விரைவில் இன்று வந்திருக்க தீர்ப்புக்கு முழு விவரமும் தெரிந்த பிறகு அப்பீல் செய்வோம்” என்றார்.
பின்னர் பாஜக வளர்ச்சி குறித்து பேசுகையில், “பாஜக தமிழ்நாட்டில் வளர நினைப்பதில் தவறில்லை. ஒரு புதுக் கட்சி தொடங்கினால் அவர்கள் வளர தான் நினைப்பார்கள்” என்றார். தொடர்ந்து, `பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படுவது போல் உள்ளதே’ என செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இது கால சூழ்நிலை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து, “எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை தான். அதுதான் வழிவழியாக தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ்வுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதா என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்தால் அனைத்திற்கும் விடை கிடைக்கும். அனைத்தும் சரியாகும். மிக விரைவில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். வரப்போகின்ற நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே மாற்றத்தை நிச்சயம் பார்க்கலாம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ஆன்மீக பயணம் அரசியல் பயணமாக மாறுமா என்ற கேள்விக்கு, “ஆம் இனிமேல் அதை தான் செய்ய உள்ளேன்” என தெரிவித்தார் சசிகலா.
சசிகலாவின் பேட்டிக்கு அதிமுக தரப்பிலிருந்து இதுவரை விளக்கமேதும் அளிக்கப்படவில்லை. முன்னதாக இன்றைய தினம் “அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்” என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்படும் என சசிகலா பேட்டியளித்திருந்தார். இதையடுத்து அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனையில் இன்று ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தில் தொண்டர்களும் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்.
சமீபத்திய செய்தி: ”ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முயற்சிக்கிறார்கள்” - போராட்டத்தில் எதிர்ப்பாளர்கள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்