பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆட்சிக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற கூட்டம் நாளை காலை 11 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரிப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இளைய சகோதரர். 1997 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ஷெபாஸ் ஷெரிப், 1999ஆம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து, பதவியை இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்.
அடுத்த ஆண்டே பாகிஸ்தானிலிருந்து வெளியேறி சவுதிக்கு நாடு கடத்தப்பட்டார். அதன்பிறகு 2007ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பிய அவர், 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் மீண்டும் பஞ்சாப் முதலமைச்சரானார். 2017ஆம் ஆண்டு தேசிய அரசியலில் நுழைந்து ஷெபாஸ் ஷெரிப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பணமோசடி குற்றச்சாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அவர், கடந்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்