குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உம்ரான் மாலிக் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஹைதராபாத் அணி, 6 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, கடைசி ஓவரில் சிக்சர்கள் பறக்கவிட்டு 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் குஜராத் அணியின் 5 விக்கெட்டையும் வீழ்த்தி ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் அசத்தியிருந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அவர் முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்த ஆட்டத்திலும் அவர் 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இந்த சீசனில் அனைவரையும் கவர்ந்த வேகப்பந்து வீச்சாளராக 22 வயதான உம்ரான் மாலிக் திகழ்கிறார். "நான் உம்ரான் மாலிக்கைப் பார்க்க வந்தேன்" என்ற ரசிகர் ஒருவரின் பேனர் டிவி கேமராக்களின் கவனத்தை ஈர்த்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் டேல் ஸ்டெய்னுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றி பேசிய உம்ரான் மாலிக், “மெதுவான பந்துகள், யார்க்கர் அல்லது பவுன்சர்கள் என வெவ்வேறு பேட்ஸ்மேன்களுக்கான திட்டங்களை உருவாக்க முயற்சிக்கிறேன். திட்டங்கள் அதன்படி செயல்படுகின்றனவா இல்லையா என்பது கடவுளின் பொறுப்பு. ஸ்டெயினின் அறிவுரை, திட்டங்களைக் கொண்டு அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் உடன் பணிபுரிவது பெரும் பாக்கியம்'' என்று கூறினார்.
இதையும் படிக்கலாம்: பரபரப்பான கடைசி ஓவரில் சிக்ஸர் மழை - குஜராத் அணி த்ரில் வெற்றி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்