Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

2 பந்துகளில் 12 ரன் தேவை: அதிரடி காட்டிய திவாட்டியா- குஜராத் த்ரில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில், தொடக்க வீரர்களான மயங்க் அகர்வால் 5 ரன்களுக்கும் தவான் 35 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடி 64 ரன்களை குவித்தார். இதில் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்து, ஐபிஎல்-ல் இரண்டாவது அதிவேக அரைசதம் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

அடுத்துவந்த நடுவரிசை வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்வரிசை வீரரான ராகுல் சாஹர் 22 ரன்கள் எடுத்தார். முடிவில் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 189 ரன்கள் எடுத்தது. அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

image

வெற்றி இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மற்றொரு வீரரான சுப்மன் கில் பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் சாய் சுதர்சனும் சிறப்பாக விளையாடினார். தனது அறிமுகப் போட்டியில் அவர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களுக்கு ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 27 ரன்களுக்கு ரன் அவுட் ஆக, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

image

இறுதி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஓடீன் ஸ்மித் வீசிய முதல் நான்கு பந்துகளில் 7 ரன்களை எடுத்தது குஜராத் அணி. கடைசி இரு பந்துகளையும் சிக்ஸருக்கு விளாசி அணிக்கு நம்பமுடியாத வெற்றியை பெற்று தந்தார் ராகுல் திவாட்டியா

இதையும் படிக்க: தோனி, ரெய்னாவிற்குப் பிறகு புதிய சாதனை படைக்கும் ஜடேஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/DxtLKAF

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்