இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேஜிஎஃப் 2 திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பாளருக்கு வெறும் 19 வயது தான் ஆகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது அதன் படத்தொகுப்பு எனப்படும் எடிட்டிங். சுமாரான திரைக்கதையை கூட திறமையான எடிட்டர் கையில் கொடுத்தால் அவரால் அதை சுவாரசியமாக மாற்றிவிட முடியும். அதேபோல, விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட திரைப்படம் ஒன்று, திறமையில்லாத எடிட்டர் கையில் மாட்டிக் கொண்டால் படம் பிசிறு தட்டிவிடும். அதற்கு பல திரைப்படங்களை நம்மால் உதாரணமாக கூற முடியும். அந்த அளவுக்கு முக்கியமான எடிட்டிங் பணியை, கேஜிஎஃப் -2 திரைப்படத்தில் செய்தது ஒரு 19 வயது இளைஞன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உஜ்வால் குல்கர்னி என்ற 19 வயது இளைஞர் தான் கேஜிஎப் - 2 திரைப்படத்தை தரமாக செதுக்கியிருக்கிறார்.
ஆரம்பத்தில் யூடியூப் வீடியோக்கள் மற்றும் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட வீடியோக்களை எடிட் செய்து பிரபலமானவர் உஜ்வால் குல்கர்னி. இவரது திறமையை கண்டு வியந்த இயக்குனர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் 2 படத்தின் எடிட்டிங் பொறுப்பை உஜ்வல் குல்கர்னியிடம் வழங்கியுள்ளார். குல்கர்னியும் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை கனகச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு ஃபிரேமிலும் குல்கர்னி தனது தனி முத்திரையை பதித்திருப்பதாக மூத்த எடிட்டர்களே கூறும் அளவுக்கு பட்டையை கிளப்பியிருக்கிறார் மனிதர். சாதிப்பதற்கு ஆர்வமும், உழைப்பும் இருந்தால் போதும், வயது முக்கியமில்லை என்பதை நிரூபித்து, இன்றைய இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார் உஜ்வல் குல்கர்னி. இனி வரும் காலங்களில், குர்கர்னியில் கைவண்ணத்தில் பல திரைப்படங்கள் உருவாகப் போவது நிச்சயம். ரசிகர்கள் சார்பில் நாம் உஜ்வலுக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்