தமிழ்நாட்டில் வரும் சனிக்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 14ஆம் தேதியான வரும் வியாழக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அதற்கு மறுநாள் புனித வெள்ளி ஆகிய இரண்டு தினங்களும் அரசு விடுமுறை நாட்களாகும். இந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதியான சனிக்கிழமையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. ஏப்ரல் 18ஆம் தேதியான தினங்களன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவைப் பொறுத்தவரையில் தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக கருதினாலும், தமிழ்நாடு அரசு தற்போதும் சித்திரை ஒன்றாம் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக கடைப்பிடித்து வருவது இந்த அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது. இதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்