ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நேற்று ஜப்பானின் ஃபுக்குஷிமா அருகே ஆழ்கடலில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததாக ஜப்பான் வானியல் முகமை தெரிவித்திருந்தது. அந்த நிலநடுக்கத்தால் ஃபுக்குஷிமாவில் உள்ள ஒரு நகரில் கட்டடங்கள் சேதமடைந்ததுடன், தீ விபத்தும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றுடன் நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 80க்கும் அதிகமானோர் காயமடைந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் சுமார் 20 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் லடாக் பகுதியிலும் நேற்று இரவு 7.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், அது சில விநாடிகள் வரை நீடித்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமி மட்டத்தில் இருந்து 110 கிலோ மீட்டர் ஆழத்தில், அட்சயரேகையில் 36.01 டிகிரி கோணத்தில், தீர்க்கரேகையில் 75.18 டிகிரி கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்