உக்ரைன் மீது உக்கிரமாக போர் புரிந்து வருகிறது ரஷ்யா. இந்நிலையில் கார்கிவ் நகரில் தஞ்சம் புகுந்துள்ள வயலின் இசைக்கலைஞரான Vera Lytovchenko தனது இசையின் மூலம் போரினால் புண்பட்டு ரணமாகியுள்ள மக்களின் மனதுக்கு தற்காலிகமாக சில நிமிடங்களாவது அந்த வலியை மறக்கடிக்க செய்து வருகிறார். அதோடு அவர் சமூக ஊடகத்திலும் சென்சேஷனாகி உள்ளார்.
விவால்டி மற்றும் உக்ரேனிய மெல்லிசைகளை அவர் வயலினில் மீட்டு வருகிறார். அதை சமூக ஊடகத்தின் வழியே கேட்கும் உலக நாடுகளின் மக்கள் மனம் உருகி மெசேஜ் செய்து வருகின்றனர். அதோடு அதன் மூலம் நிதி திரட்டும் பணியையும் Vera Lytovchenko மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
View this post on Instagram
“நான் ஒரு படைவீரனோ, மருத்துவரோ, அரசியல் தலைவனோ இல்லை. எனக்கு தெரிந்தது எல்லாம் வயலின் வாசிப்பது. நான் கற்றதும், பெற்றதும் அது தான். வீடு, உடமை, இசைக்கருவி மாதியானவற்றை இழந்த எனது நண்பர்கள், இசை ஆசிரியர்களுக்கும் உதவ வேண்டும் என நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார் 39 வயதான Vera Lytovchenko.
இதனை செய்ய தனக்கு தனது மாணவர் ஒருவர் இன்ஸ்பிரேஷனாக இருந்தார் என்பதை அவரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதை ஒன்றில் தஞ்சம் தேடி உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு சென்ற மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அந்த மாணவர் வயலின் இசையை மீட்டு அசத்தியுள்ளார்.
தற்போது அவர் கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை போலவே பல்வேறு இசை கலைஞர்கள் தங்களது கருவி மூலம் உக்ரைன் தாலாட்டுகளை வாசித்து வருவதாக சொல்லப்பட்டுள்ளது.
இசையின் சக்தி வலிமையானது என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்