2026-ல் முதல் வேட்பாளர் விஜய் - அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முடிவு எடுத்தால் முதல்வர் என நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு, ஒரு சில வார்டுகளில் வெற்றியும் பெற்றனர்.
நடிகர் விஜய்யை அவ்வப்போது அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில் முடிவு எடுத்தால் முதல்வர் தான், 2021-ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என்றும், 2026-ல் நடிகர் விஜய் எனக்குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டு உள்ளதோடு, 2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என இருவரது படத்தையும் அச்சிட்டு ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, ஆட்சியில் உள்ள திமுகவை சீண்டும் வகையில் இந்த போஸ்டர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/gVdRLzr2026-ல் முதல் வேட்பாளர் விஜய் - அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முடிவு எடுத்தால் முதல்வர் என நடிகர் விஜய்யை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பல இடங்களில் சுயேட்சையாக வேட்பாளர்கள் போட்டியிட்டதோடு, ஒரு சில வார்டுகளில் வெற்றியும் பெற்றனர்.
நடிகர் விஜய்யை அவ்வப்போது அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கும் விதமாக சுவாரஸ்யமான சுவரொட்டிகளை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் விஜய்யை மீண்டும் அரசியலுக்கு இழுக்கும் விதமாக மதுரை ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த போஸ்டரில் முடிவு எடுத்தால் முதல்வர் தான், 2021-ல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை குறிப்பிடும் வகையில் தளபதி என்றும், 2026-ல் நடிகர் விஜய் எனக்குறிப்பிடும் வகையில் தளபதி என குறிப்பிட்டு உள்ளதோடு, 2026-ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என நடிகர் விஜய் படத்தையும், 2026-ல் தளபதி மக்கள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் என இருவரது படத்தையும் அச்சிட்டு ஒட்டியுள்ள போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதோடு, ஆட்சியில் உள்ள திமுகவை சீண்டும் வகையில் இந்த போஸ்டர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்