இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, டி20 தொடரை இழந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. பகல் இரவாக நடைபெறும் இப்போட்டியில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிப்பது கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்திய அணியில், குல்தீப் யாதவுக்கு பதில், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் விளையாடுவார் எனத் தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான அகமதாபாத்தில் நடைபெற்ற பகல் இரவு போட்டியில் அவர் 11 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதனிடையே, 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு சதம் அடிக்காத விராட் கோலி, எவ்வாறு விளையாடப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கையை பொருத்தவரையில், வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரா, பேட்ஸ்மேன் பதும் நிஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/jt4hWlGஇந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை, டி20 தொடரை இழந்தது. இதையடுத்து அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. பகல் இரவாக நடைபெறும் இப்போட்டியில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிப்பது கர்நாடக கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. இந்திய அணியில், குல்தீப் யாதவுக்கு பதில், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் விளையாடுவார் எனத் தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான அகமதாபாத்தில் நடைபெற்ற பகல் இரவு போட்டியில் அவர் 11 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதனிடையே, 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு சதம் அடிக்காத விராட் கோலி, எவ்வாறு விளையாடப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இலங்கையை பொருத்தவரையில், வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரா, பேட்ஸ்மேன் பதும் நிஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்