உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முந்தைய நாளில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியதாக ஹாலிவுட் நடிகர் சீன் பென் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முதல் நாள் தொடங்கி ஆவணப் படமாக்கி வெளியிட்டு வந்தவர், ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் சீன் பென். பின்னர் போர் தீவிரமடைந்ததால் போலந்து வழியாக உக்ரைனை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முந்தைய நாளில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியதாக சீன் பென் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீன் பென் கூறுகையில், ''ரஷ்ய தாக்குதல் தொடங்கிய முந்தைய தினத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினேன். அவர் இதற்காகத்தான் பிறந்தார் என்பது அவருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. தைரியம், கண்ணியம், அன்பு மற்றும் நாட்டை ஒருங்கிணைத்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில் உக்ரைனியர்களின் பிரதிபலிப்பாக ஜெலன்ஸ்கி இருந்தார். நான் முடிவில்லாமல் அவரால் ஈர்க்கப்பட்டேன். அவருக்கும் உக்ரைன் மக்களுக்கும் அப்போது பயமாக இருந்தது என்பது மறுப்பதற்கில்லை.
உக்ரைன்-ரஷ்யா மோதல் விரைவில் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் புடின் வெற்றி பெற்றால் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்கள் சுதந்திர நாடுகளாக அறிவிக்கக்கூடும். இது உலகை துண்டாடக்கூடும். உக்ரைனின் ஜனநாயக சின்னம் தாக்கப்படுகிறது. அந்நாட்டு மக்கள் உயிருக்குப் போராடுகிறார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள். இந்த மோதல் அணு ஆயுதப் போரை உருவாக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உக்ரேனியர்களுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் ஆதரவளிக்க எங்களிடம் உள்ள அனைத்தையும் முதலீடு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்'' என்று கூறினார்.
இதையும் படிக்க: ``உக்ரைன் வான்பரப்பில் விமானங்களுக்கு தடை விதித்தால்....”- ரஷ்ய அதிபரின் அடுத்த எச்சரிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/IqvSlA1உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முந்தைய நாளில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியதாக ஹாலிவுட் நடிகர் சீன் பென் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை முதல் நாள் தொடங்கி ஆவணப் படமாக்கி வெளியிட்டு வந்தவர், ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் சீன் பென். பின்னர் போர் தீவிரமடைந்ததால் போலந்து வழியாக உக்ரைனை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் முந்தைய நாளில் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசியதாக சீன் பென் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீன் பென் கூறுகையில், ''ரஷ்ய தாக்குதல் தொடங்கிய முந்தைய தினத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினேன். அவர் இதற்காகத்தான் பிறந்தார் என்பது அவருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. தைரியம், கண்ணியம், அன்பு மற்றும் நாட்டை ஒருங்கிணைத்த விதம் ஆகியவற்றின் அடிப்படையில் உக்ரைனியர்களின் பிரதிபலிப்பாக ஜெலன்ஸ்கி இருந்தார். நான் முடிவில்லாமல் அவரால் ஈர்க்கப்பட்டேன். அவருக்கும் உக்ரைன் மக்களுக்கும் அப்போது பயமாக இருந்தது என்பது மறுப்பதற்கில்லை.
உக்ரைன்-ரஷ்யா மோதல் விரைவில் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் புடின் வெற்றி பெற்றால் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சி பிராந்தியங்கள் சுதந்திர நாடுகளாக அறிவிக்கக்கூடும். இது உலகை துண்டாடக்கூடும். உக்ரைனின் ஜனநாயக சின்னம் தாக்கப்படுகிறது. அந்நாட்டு மக்கள் உயிருக்குப் போராடுகிறார்கள், அவர்கள் அதைத் தொடர்ந்து செய்வார்கள். இந்த மோதல் அணு ஆயுதப் போரை உருவாக்குமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உக்ரேனியர்களுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் ஆதரவளிக்க எங்களிடம் உள்ள அனைத்தையும் முதலீடு செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்'' என்று கூறினார்.
இதையும் படிக்க: ``உக்ரைன் வான்பரப்பில் விமானங்களுக்கு தடை விதித்தால்....”- ரஷ்ய அதிபரின் அடுத்த எச்சரிக்கை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்