Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

`அரசு பேருந்து நின்று செல்லும் மோட்டல்களில் சைவ உணவுகளுக்கு மட்டுமே அனுமதி'- விரிவான தகவல்

தமிழகத்தில் அரசு பேருந்துகள் நிறுத்தப்படும் நெடுஞ்சாலையோர உணவகங்களில் சைவ உணவு மட்டும்தான் தயாரிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் நின்று செல்ல, `ஓராண்டு உரிமம்’ பெறுவதற்கு உணவகங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதில் அரசுப் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய, உணவகங்களுக்கான நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிபந்தனைகளில்,

* உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும், மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும்.

* கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

image

* உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

* பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும்.

* உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.

* பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

* உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

* உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P. இருக்க வேண்டும். எம்.ஆர்.பி விலையை விட அதிகமில்லாமல் அனைத்து உணவும் விற்கப்பட வேண்டும்.

* உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படாவண்ணம் இருக்க வேண்டும்.

* உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்ட புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

சமீபத்திய செய்தி: துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/iZuWg2w

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்