உக்ரைனில் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கிய உள்ள இந்திய மாணவர்கள், அங்கிருந்து தங்களை மீட்க வேண்டும் என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடும்பனிப் பொழிவு, ஏவுகணைத் தாக்குதல், உணவு, குடிநீரற்ற நிலை என கடினமான சூழலை அங்குள்ள மாணவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ தளவாடங்கள், அரசு அலுவலகங்களை குறி வைத்து தாக்கி வந்த ரஷ்ய படைகள், தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், உக்ரைனில் மாணவர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். சரியான உணவில்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேசும் மாணவர்கள், "போலந்து எல்லைக்கு செல்ல பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்துள்ளோம். போலந்து எல்லையில் பெயர் பட்டியல் கேட்பதாக கூறப்படுகிறது. கீவ், கார்கிவ்வில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இந்திய அரசின் மீட்பு வழிமுறை குறித்து தெளிவான அறிவிப்பில்லை. அச்சத்தில் செய்வதறியாது மனப்பிறழ்வு ஏற்படுமோ என வேதனையாக உள்ளது'' என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் பயத்தை காட்டி விட்டனர் என மாணவ, மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது. இந்திய தூதரகம் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/OclNDeZஉக்ரைனில் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கிய உள்ள இந்திய மாணவர்கள், அங்கிருந்து தங்களை மீட்க வேண்டும் என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடும்பனிப் பொழிவு, ஏவுகணைத் தாக்குதல், உணவு, குடிநீரற்ற நிலை என கடினமான சூழலை அங்குள்ள மாணவர்கள் அனுபவித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது கடந்த வியாழக்கிழமை முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனின் ராணுவ தளவாடங்கள், அரசு அலுவலகங்களை குறி வைத்து தாக்கி வந்த ரஷ்ய படைகள், தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், உக்ரைனில் மாணவர்கள் சிக்கித்தவித்து வருகின்றனர். சரியான உணவில்லாமல் அவர்கள் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக பேசும் மாணவர்கள், "போலந்து எல்லைக்கு செல்ல பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்துள்ளோம். போலந்து எல்லையில் பெயர் பட்டியல் கேட்பதாக கூறப்படுகிறது. கீவ், கார்கிவ்வில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இந்திய அரசின் மீட்பு வழிமுறை குறித்து தெளிவான அறிவிப்பில்லை. அச்சத்தில் செய்வதறியாது மனப்பிறழ்வு ஏற்படுமோ என வேதனையாக உள்ளது'' என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். உயிர் பயத்தை காட்டி விட்டனர் என மாணவ, மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நிலைமை மோசமாக உள்ளது. இந்திய தூதரகம் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்