Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

விரைவில் போர் நிறுத்தமா? ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

உக்ரைன் மீதான போரில் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யப்படையினரின் நடத்தும் போர்த் தாக்குதல்கள் இரண்டாவது மாதமாக நீடிக்கிறது. தலைநகர் கீவை கைப்பற்ற தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது ரஷ்யா. முன்னதாக போர் நிறுத்தம் குறித்து, பெலராஸில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் இரு நாடுகளுடனும் கருங்கடல் எல்லையை பகிர்ந்து வரும் துருக்கியில் மார்ச் 10 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந்தது.

image

இதன் தொடர்ச்சியாக இஸ்தான்புல் நகரில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் கூறினார். மேலும், கீவ் அருகே செர்னிவ் பகுதியில் படைகளை குறைக்க உள்ளதாகவும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் வேறு நாடுகளுடன் சேர்ந்து ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற ரஷ்யாவின் நிலைப்பாட்டை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், கீவ் மற்றும் செர்னிவ் நகரங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, உக்ரைன் - ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 106 டாலராக சரிந்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/D40ZMWN

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்