உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து யுத்தம் செய்து வருகிறது ரஷ்யா. இந்நிலையில் அதன் எதிரொலியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை ரஷ்யா அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என சொல்லி இடைநீக்கம் செய்துள்ளது சர்வதேச நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA). இதையே ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் (UEFA) தெரிவித்துள்ளது.
இந்த இடைநீக்கத்தால் ரஷ்யா ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக ரஷ்யா நாட்டில் இந்த மாதம் பிளே-ஆஃப் சுற்றுகள் நடைபெற இருந்தது. ஆனால் அதில் விளையாட இருந்த போலந்து உள்ளிட்ட சில நாடுகள் மறுத்திருந்தன. மேலும் அது தொடர்பாக ஃபிபாவுக்கு தங்களது வாதத்தையும் முன்வைத்திருந்தன அந்த அணிகள். இந்த நிலையில் ஃபிபா நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ரஷ்ய அணிகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் தேசிய அணி மற்றும் கால்பந்து அணிகளுக்கும் பொருந்தும் என UEFA அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் உக்ரைன் நாட்டின் நிலை சீரடையும் பட்சத்தில் மட்டுமே ரஷ்யா உலகக் கோப்பை பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்க வாய்ப்பாக அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/8UnMITbஉக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து யுத்தம் செய்து வருகிறது ரஷ்யா. இந்நிலையில் அதன் எதிரொலியாக அடுத்த அறிவிப்பு வரும் வரை ரஷ்யா அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என சொல்லி இடைநீக்கம் செய்துள்ளது சர்வதேச நாடுகளின் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (FIFA). இதையே ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பும் (UEFA) தெரிவித்துள்ளது.
இந்த இடைநீக்கத்தால் ரஷ்யா ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக ரஷ்யா நாட்டில் இந்த மாதம் பிளே-ஆஃப் சுற்றுகள் நடைபெற இருந்தது. ஆனால் அதில் விளையாட இருந்த போலந்து உள்ளிட்ட சில நாடுகள் மறுத்திருந்தன. மேலும் அது தொடர்பாக ஃபிபாவுக்கு தங்களது வாதத்தையும் முன்வைத்திருந்தன அந்த அணிகள். இந்த நிலையில் ஃபிபா நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒட்டுமொத்தமாக ரஷ்ய அணிகள் அனைத்தும் அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அந்த நாட்டின் தேசிய அணி மற்றும் கால்பந்து அணிகளுக்கும் பொருந்தும் என UEFA அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் உக்ரைன் நாட்டின் நிலை சீரடையும் பட்சத்தில் மட்டுமே ரஷ்யா உலகக் கோப்பை பிளே-ஆஃப் சுற்றில் பங்கேற்க வாய்ப்பாக அமையும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்