இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2 - 0 என்ற கணக்கில் வென்றுள்ளது. பெங்களூருவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
இந்த போட்டியின் ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இரு அணிகளும் இழந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டரை நாட்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 39 விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இருந்தும் இந்தியா இந்த போட்டியில் வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது ஷ்ரேயஸ் ஐயரின் ஆட்டம். முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து அசத்தினார் அவர். முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார்.
அதே போல பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அஷ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியில் இலங்கை அணிக்கு ஆறுதலாக அமைந்த ஒரே விஷயம் அந்த அணியின் கேப்டன் கருணரத்னே நான்காவது இன்னிங்ஸில் பதிவு செய்திருந்தார். “இந்த போட்டியை நாங்கள் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போனது. இங்கு பேட் செய்வது மிகவும் கடினமாக இருந்தது” என தோல்விக்கு பிறகு கருணரத்னே தெரிவித்துள்ளார்.
இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை ஷ்ரேயஸ் ஐயர் வென்றிருந்தார். தொடர் நாயகன் விருதை இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் வென்றிருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்