இந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன என்பதை குறித்து பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இதில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக கூட்டணி 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி 31 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 20 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், அகாலிதளம் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் காங்கிரஸ் கூட்டணி 1 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/gNrKYsGஇந்தியாவில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில், எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன என்பதை குறித்து பார்க்கலாம்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி, மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
இதில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக கூட்டணி 120 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 95 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில், ஆம் ஆத்மி 31 இடங்களிலும், ஆளும் காங்கிரஸ் 20 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும், அகாலிதளம் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில், பாஜக 22 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூரில் காங்கிரஸ் கூட்டணி 1 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 15 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கோவா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்