2022 - 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்து நாட்டில் இன்று தொடங்கியுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்றுப் போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு கடந்த பிப்ரவரி மாதமே சென்றிருந்தது. அந்நாட்டு அணியுடன் ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடி உள்ளது. கடந்த 2017 - 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்றிருந்தது இந்தியா. அதனால் இந்த முறை கோப்பையை மிதாலி மற்று அணியினர் குறி வைத்துள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா முதல் போட்டியில் வரும் 6-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. தொடர்ந்து நியூசிலாந்து (மார்ச் 10), வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 12), இங்கிலாந்து (மார்ச் 16), ஆஸ்திரேலியா (மார்ச் 19), வங்கதேசம் (மார்ச் 22), தென்னாப்பிரிக்க (மார்ச் 27) ஆகிய அணிகளுடன் இந்தியா விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/TLCsbd92022 - 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடர் நியூசிலாந்து நாட்டில் இன்று தொடங்கியுள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் முதல் சுற்றுப் போட்டி நடைபெறுகிறது. இரண்டாவது சுற்று நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு கடந்த பிப்ரவரி மாதமே சென்றிருந்தது. அந்நாட்டு அணியுடன் ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடி உள்ளது. கடந்த 2017 - 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்றிருந்தது இந்தியா. அதனால் இந்த முறை கோப்பையை மிதாலி மற்று அணியினர் குறி வைத்துள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தியா முதல் போட்டியில் வரும் 6-ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. தொடர்ந்து நியூசிலாந்து (மார்ச் 10), வெஸ்ட் இண்டீஸ் (மார்ச் 12), இங்கிலாந்து (மார்ச் 16), ஆஸ்திரேலியா (மார்ச் 19), வங்கதேசம் (மார்ச் 22), தென்னாப்பிரிக்க (மார்ச் 27) ஆகிய அணிகளுடன் இந்தியா விளையாடுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்