உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்தத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி முதல் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கும். பிற்பகல் 1 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரியவர வாய்ப்புள்ளதாகவும், மாலைக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநிலங்களில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 650 அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறையினருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: உக்ரைனில் இருந்து மீட்க உதவி - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் மாணவி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/q8lDwC7உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை நடைபெற்றது. 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கையை நடத்தத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 9 மணி முதல் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கும். பிற்பகல் 1 மணிக்குள் பெரும்பாலான முடிவுகள் தெரியவர வாய்ப்புள்ளதாகவும், மாலைக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநிலங்களில், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 650 அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில காவல்துறையினருடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: உக்ரைனில் இருந்து மீட்க உதவி - பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் மாணவி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்