ரஷ்யா உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24 ஆம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம், தலைநகர் கிவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், பெலராஸில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், 2-வது பேச்சுவார்த்தையில் மனிதாபிமான முறையில் சில நடவடிக்கைகள் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நாளை திங்கள்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி டேவிட் தெரிவித்துள்ளார். எனினும், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.
சமீபத்திய செய்தி: அமைதியான முறையில் பிரச்சனைக்கு தீர்வு காண உக்ரைன் முட்டுக்கட்டையாக உள்ளது : புதின்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/rhdqbwN

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்