Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஐபிஎல் 2022: டெல்லி அணியுடன் இணைந்த முக்கிய வீரர்கள்

https://ift.tt/R4AygKn

டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும்  ஆல்ரவுண்டர் அக்சார் படேல் ஆகிய இருவரும் அணியுடன் இணைந்துள்ளனர்.

2022ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கு முன்பாக அனைத்து அணியின் வீரர்களும் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு அணியும் தனித்தனியாக ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அணியின் பயோ-பபுளில் வீரர்கள் இணைவார்கள்.  

இதனிடையே இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் வீரர்கள் தங்களுடைய ஐபிஎல் அணிகளுடன் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும்  ஆல்ரவுண்டர் அக்சார் படேல் ஆகிய இருவரும் அணியுடன் இணைந்துள்ளனர். டெல்லி அணி வீரர்கள் மும்பையில் உள்ள டீம் ஹோட்டலில் பயோ பபுளில் உள்ளனர். இதுதொடர்பாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் ரிஷப் பண்ட், அக்சார் படேல், கே.எஸ். பாரத், பிருத்வி ஷா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்  ஆகியோர் அணியில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், உதவி பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஆகியோர் அணியுடன் இணைந்துள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷேன் வாட்சன் விரைவில் அணியுடன் இணைய இருக்கிறார்.  

இதுதொடர்பாக ஷேன் வாட்சன் கூறுகையில், "ஐபிஎல், உலகின் சிறந்த டி20 போட்டி. ஒரு ஐபிஎல் வீரராக எனக்கு நம்ப முடியாத நினைவுகள் உள்ளன. ரிக்கி பாண்டிங்கின் கீழ் பணியாற்றுவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். ரிக்கி பாண்டிங் உலகின் சிறந்த பயிற்சியாளர்களில் ஒருவர்'' என்று கூறினார்.

டெல்லி கேபிட்டல்ஸ்  அணி தங்கள் தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை மார்ச் 27 ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இதையும் படிக்க: கோலியை பின்னுக்குத் தள்ளினார் கேப்டன் ரோகித் சர்மா! எந்த விஷயத்தில் தெரியுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்