நவி மும்பையில் உள்ள DY பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட் செய்து 205 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் கேப்டன் டூப்ளசிஸ், 88 ரன்கள் பதிவு செய்தார். முன்னாள் கேப்டன் கோலி 41 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என பஞ்சாப் இலக்கை விரட்ட தொடங்கியது.
பஞ்சாப் அணிக்கு தவான் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மயங்க் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் மற்றும் பனுகா ராஜபக்சே தலா 43 ரன்கள் எடுத்தனர். லிவிங்ஸ்டன் 19 ரன்கள் எடுத்தார்.
30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்தது. களத்தில் ஷாருக்கான் மற்றும் ஒடியன் ஸ்மித் இருந்தனர். இருவரும் 24 பந்துகளில் அந்த ரன்னை எடுத்து தங்கள் அணியை வெற்றி பெற செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/1uzE4owநவி மும்பையில் உள்ள DY பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட் செய்து 205 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் கேப்டன் டூப்ளசிஸ், 88 ரன்கள் பதிவு செய்தார். முன்னாள் கேப்டன் கோலி 41 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் எடுத்து இறுதி வரை அவுட்டாகாமல் இருந்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என பஞ்சாப் இலக்கை விரட்ட தொடங்கியது.
பஞ்சாப் அணிக்கு தவான் மற்றும் கேப்டன் மயங்க் அகர்வால் இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மயங்க் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். தவான் மற்றும் பனுகா ராஜபக்சே தலா 43 ரன்கள் எடுத்தனர். லிவிங்ஸ்டன் 19 ரன்கள் எடுத்தார்.
30 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தால் வெற்றி என இருந்தது. களத்தில் ஷாருக்கான் மற்றும் ஒடியன் ஸ்மித் இருந்தனர். இருவரும் 24 பந்துகளில் அந்த ரன்னை எடுத்து தங்கள் அணியை வெற்றி பெற செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்