Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர் யார் தெரியுமா? - டாப் 15 பட்டியல்!

https://ift.tt/IDOudvn

கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவம் என போற்றப்படுகிறது டெஸ்ட் கிரிக்கெட். டி20, 100 பால் கிரிக்கெட் என கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும் பார்மெட்டுகள் மாற்றம் கண்டுள்ள இன்றைய சூழலிலும் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர் என்பதற்கு அண்மையில் நடைபெற்ற பல டெஸ்ட் போட்டிகளை உதாரணமாக சொல்லலாம். 

அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். டாப் 15 வீரர்களில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார். 

image

அதிக பந்துகளை எதிர்கொண்ட வீரர்கள் யார்?

கடந்த 1929-இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் WR ஹம்மண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 977 பந்துகள் விளையாடி இருந்தார். இது நாள் வரையில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் விளையாடிய வீரர் என்ற சாதனை அவர் வசமே உள்ளது. அவரை தொடர்ந்து ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (871), லியோனார்ட் ஹட்டன் (847), க்ளென் டர்னர் (759), ராபர்ட் சிம்ப்சன் (749), ஜெஃப்ரி பாய்காட் (725) மற்றும் மார்க் டெய்லர் (723) மாதிரியான வீரர்கள் அதிக பந்துகளை ஒரே டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டு விளையாடி உள்ளனர். 

இந்திய வீரர் வி.எஸ். ஹசாரே அதிகபட்சமாக 675 பந்துகளை ஒரே டெஸ்ட் போட்டியில் எதிர்கொண்டுள்ளார். 

image

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான Kensington ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் KC பிராத்வெய்ட் முதல் இன்னிங்ஸில் 489 பந்துகள், இரண்டாவது இன்னிங்ஸில் 184 பந்துகள் என மொத்தம் 673 பந்துகளை எதிர்கொண்டார். அதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 15 வீரர்களில் ஒருவராக அவர் இணைந்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்