உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில், தனது கையில் அம்மா எழுதிய சிறுகுறிப்புடன், 11 வயது சிறுவன் தன்னந்தனியாக 1400 கி.மீ. பயணித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து, உக்ரைன் மீது ரஷ்யா 14-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா நடத்தி வரும் இந்தப் போரால், உக்ரைன் தலைநகர் கீவ், கார்கெவ், கெர்சன், ஒமேசா, மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் அண்டை நாடுகளான போலாந்து, ஸ்லோவேகியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
கடந்த 14 நாட்களாக நிகழ்ந்து வரும் இந்தப் போரில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைனின் தென்கிழக்கு பகுதியான சபோரோசையிலிருந்து மேற்கு பகுதியான ஸ்லோவேகியா நாட்டிற்கு 11 வயது சிறுவன் ஒருவன், நடந்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிறுவனின் பெற்றோர் உக்ரைன் விட்டு வெளியேற முடியாத நிலையில், ஸ்லோவேகியாவில் உள்ள தனது உறவினர் இருப்பிடத்திற்கு தன்னந்தனியாக 1400 கி.மீ. நடந்து சென்றுள்ளான். சிறுவனின் கையில், அவனது தாய், உறவினரின் செல்ஃபோன் எண், எல்லையை கடப்பதற்காக சிறுவனின் பாஸ்போர்ட் எண் ஆகியவற்றை எழுதியுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுவன் ரயிலில் பயணித்தும், நடந்தும் என பல்வேறு நபர்களின் உதவியுடனும் தனியாக பயணித்து, ஸ்லோவேகியா நாட்டிற்குள் நுழைந்துள்ளார்.
வழியில் அந்த சிறுவனுக்கு, தேவையான தண்ணீர் மற்றும் உணவுகளை தன்னார்வலர்கள் அக்கறையுடன் கொடுத்து கவனித்துள்ளனர். பின்னர், ஸ்லோவேகியா எல்லையில் அந்த சிறுவனை, அவனது உறவினர் வந்து அழைத்து சென்றுள்ளார். கையில் சிறிய பையுடன் எல்லையை கடந்த சென்ற அந்த சிறுவன், தனது சிரிப்பால் அனைவரின் மனதையும் வென்றுள்ள உண்மையான ஹீரோ என, சிறுவனின் புகைப்படத்தை பகிர்ந்து, உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லையை கடக்கும் வழியில் தனது மகனை கவனித்துக் கொண்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள் என அனைவருக்கும் கண்ணீர் மல்க சிறுவனின் தாய் நன்றி கூறியுள்ளார். இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்