எதிர்வரும் 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. 10 ஐபிஎல் அணிகளும் சேர்ந்து 204 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். தோனி கேப்டனாக தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக இந்த ஏலத்தில் வீரர்களை எடுத்துள்ளது. இந்த நிலையில் சென்னை அணி இந்த ஏலத்தை எப்படி அணுகியுள்ளது என்பதில் தொடங்கி பல்வேறு விஷயங்களை புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் ஆர்வலரும், TNPL மதுரை அணியின் சி.இ.ஓ மகேஷ் சுப்ரமணியம்.
இந்த ஏலத்தில் வீரர்கள் அதிக விலை போக காரணம் என்ன?
ஒவ்வொரு அணிக்கு ஒரு சென்டிமெண்ட் இருக்கும். உதாரணமாக பார்த்தால் ராயுடு, பிராவோ மற்றும் தீபக் சாஹர் மாதிரியான வீரர்களை என்ன விலையானாலும் எடுப்பார்கள் என்பது மற்ற அணிகளுக்கு தெரியும். அதனால் மற்ற அணிகள் ஏலத்தில் விலையை ஏற்றி விட்டதன் விளைவாக இதை பார்க்கிறேன். இதில் ரொம்பவே சர்ப்ரைஸாக இருந்தது தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் ஷாருக்கானை 9 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரது டொமஸ்டிக் கிரிக்கெட் பர்ஃபாமென்ஸ் அதற்கு காரணம்.
இந்த ஏலத்தில் சென்னை அணியின் சிறந்த வீரர் பிக் யார்?
இந்த மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த வீரர் Dwaine Pretorius தான் சென்னை அணியின் சிறந்த பிக் என நான் பார்க்கிறேன். இருந்தாலும் டூப்ளசிஸ் மற்றும் ஷர்துல் தாக்கூர் மாதிரியான வீரர்கள் சென்னை அணி மிஸ் செய்துள்ளதாகவும் நான் சொல்வேன்.
இந்த சீசனில் சென்னை அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
டேவன் கான்வே, ருதுராஜ், உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, ஜடேஜா, தோனி, பிராவோ, தீபக் சாஹர் என இந்த வீரர்கள் அணியில் பிரதான வீரர்களாக இருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இப்போது அமைந்துள்ள சென்னை அணியின் எதிர்காலம் எப்படி?
இந்த ஏலத்தில் சென்னை அணி அனுபவம், பிளஸ் இளமை என அணுகியுள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் சிலர் ஓய்வு பெற அடுத்தடுத்த சீசன்களில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது. அதனை வைத்து பார்க்கும் போது இந்த அணி எதிர்வரும் சீசனை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட அணியாக உள்ளது.
தோனிக்கு அடுத்து சென்னை அணியின் கேப்டன்?
தோனிக்கு நிகர் தோனிதான். அவருக்கு மாற்று என்பதே கிடையாது. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக அவர் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் ஓய்வு பெறும் பட்சத்தில் அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்பட வாய்ப்புகள் உள்ளது. தோனியுடன் நீண்ட நாள் பயணித்த அனுபவம் இவருக்கு உள்ளது. தோனியிடம் கற்ற பாடத்தில் அடிப்படையில் அணியை அவர் வழிநடத்துவார் என பார்க்கிறேன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்