சென்னை - பெங்களூரு - மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
டெல்லி - வாரணாசி, மும்பை - நாக்பூர், மும்பை - ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கவும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி - அகமதாபாத், டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா நகரங்களை இணைக்கும் வகையிலும் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/rmHRQDYசென்னை - பெங்களூரு - மைசூரு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது குறித்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
டெல்லி - வாரணாசி, மும்பை - நாக்பூர், மும்பை - ஐதராபாத் உள்ளிட்ட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கவும் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் புல்லட் ரயில் இயக்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லி - அகமதாபாத், டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹவுரா நகரங்களை இணைக்கும் வகையிலும் புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரயில்வே முடிவு செய்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்