ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இதுவரை தமிழகத்தை சேர்ந்த 7 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 30 தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணியிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 9 கோடி ரூபாய்க்கு ஷாருக்கானை பஞ்சாப் அணி பெற்றுக்கொண்டது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஏலம் அடுத்தது.
இதனை தொடர்ந்து, தினேஷ் கார்த்திக்கை ஐந்தரை கோடிக்கு பெங்களூர் அணியும், ரவிசந்திர அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் வாங்கி உள்ளனர். தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி தக்க வைத்து கொண்டது. இளம் வீரர் சாய் கிஷோரை 3 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த முருகன் அஸ்வினை, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு பெற்று கொண்டது. தமிழ்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மயங்கி விழுந்த ஏலதாரர் எட்மேட்ஸ் எப்படி இருக்கிறார்? - ஐபிஎல் நிர்வாகம் கொடுத்த அப்டேட்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/XgQRZu4ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இதுவரை தமிழகத்தை சேர்ந்த 7 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 30 தமிழ்நாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணியிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், 9 கோடி ரூபாய்க்கு ஷாருக்கானை பஞ்சாப் அணி பெற்றுக்கொண்டது. தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை 8 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணி ஏலம் அடுத்தது.
இதனை தொடர்ந்து, தினேஷ் கார்த்திக்கை ஐந்தரை கோடிக்கு பெங்களூர் அணியும், ரவிசந்திர அஸ்வினை 5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியும் வாங்கி உள்ளனர். தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணி தக்க வைத்து கொண்டது. இளம் வீரர் சாய் கிஷோரை 3 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த முருகன் அஸ்வினை, மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு பெற்று கொண்டது. தமிழ்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மயங்கி விழுந்த ஏலதாரர் எட்மேட்ஸ் எப்படி இருக்கிறார்? - ஐபிஎல் நிர்வாகம் கொடுத்த அப்டேட்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்