Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஒரே நாடு ஒரே தேர்தல் விஷமத்தனமானது; அரசியல் சாசனத்தை மாற்ற முடியாது - ப.சிதம்பரம்

ஒரே நாடு ஒரே தேர்தல் விஷமத்தனமானது, சர்வாதிகாரமானது; அதிமுகவும் இதையே பேசுகிறது, அரசியல் சாசனத்தை யாராலும் மாற்ற முடியாது என திருச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

திருச்சி மாநகராட்சி 31-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதாவை ஆதரித்து வரகனேரியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது...

"இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் முதலமைச்சராக இருந்து ஏன் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. ஏன் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தவேண்டிய தேர்தலை நடத்தவில்லை. இதற்கு பதில் கூறிவிட்டு ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி கேளுங்கள்.

image

திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு வருடத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவோம் என்று கூறினார்கள் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை மேடையில்தான் தற்பொழுது இபிஎஸ், ஓபிஎஸ் கேள்வி கேட்கிறார்கள்.

நான் ஆட்சிக்கு வந்தால் 15 லட்சம் ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் போடுவேன் என்று சொன்னார் பெரியவர் (மோடி). இதுவரைக்கும் போடவில்லை. இதை ஏன் ஓபிஎஸ் இபிஎஸ் கேட்கவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். 18 குடும்பத்திற்கும் அரசு வேலை திமுக கொடுத்தார்கள். ஆயிரம் ரூபாய் வாக்குறுதி நிச்சயம் நிறைவேறும். அது குடும்பத் தலைவிக்கு தான்.

தேர்தல் வாக்குறுதிகள் ஒரு நாளில் நிறைவேறுவதில்லை; 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவது. இபிஎஸ், ஓபிஎஸ் அவர்களுக்கு ரொம்ப அவசரம். நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வருமாம். அரசியல் சாசனத்தை யாரும் மாற்ற முடியாது. கிளி ஜோசியம் சொல்வதை இபிஎஸ், ஓபிஎஸ் நிறுத்திக் கொள்ளவும்.

image

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி சேர்ந்தது பலத்தை கூட்டுவதற்கு என்று சொன்னார்கள். தற்போது தனியாக நிற்கிறார்கள், அவர்கள் பலத்தை காட்டுவதற்காக என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விஷமத்தனம். விஷமத்தனமான இந்த பேச்சை எச்சரிக்கை வேண்டும். இன்று அதிமுகவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறுகிறது. இது விஷம பேச்சு. பாரதிய ஜனதா கட்சியின் பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெறாது.

கடைசியில் ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்று வந்து விடுவார்கள். மேலும் ஒரே உணவு, ஒரே உடை என்று வந்து விடுவார்கள் அதன் வெளிப்பாடுதான் கர்நாடகவில் ஹிஜாப் விவகாரம் வந்தது.

இந்தியாவிலேயே திருச்சி கலாசார மிக்க இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய நகரம் என்ற சிறப்பு வாய்ந்தது. பின்னர் ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்று வந்துவிடும். சீனா, ரஷ்யா, துருக்கி இந்த பாதையில் தான் சென்றார்கள். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தற்போது தெரியும்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 சதவீத மார்க் கொடுத்து வெற்றி அடைய செய்தீர்கள். தற்போத மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத மார்க் கொடுத்து வெற்றி பெற வைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/HA3hpzn

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்