காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட உயர்மட்ட தொழில்நுட்ப குழுவினர் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் பகுதி நேர உறுப்பினராகவுள்ள பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும், சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் இந்துமதி எம்.நம்பி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் மகேஸ்வரி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் செல்வம், பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை என்ஜினீயர் ராமமூர்த்தி, பொதுப்பணித்துறை நீர் ஆதார அமைப்பின் நிர்வாக என்ஜினீயர் ராஜா ஆகியோர் உறுப்பினர்களாகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் கார்த்திகேயன் உறுப்பினர் மற்றும் கன்வீனராகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர், மண்ணின் தரம், காற்றின் தரம், பாசன வசதி பாதிக்கப்படுவது குறித்தும் தாவரங்கள் மற்றும் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் மதிப்பீடு செய்தது. மேலும், இதுதவிர வேறு எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்படும் என்பது பற்றியும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உணவு உற்பத்தி பாதிக்குமா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கட்டமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நேரடி கள ஆய்வு செய்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை குழுவினர், வியாழக்கிழமை மாலை தொழிற்துறை செயலாளர் கிருஷ்ணனிடம் சமர்ப்பித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வுக்குழு தலைவர் பேராசிரியர் இஸ்மாயில், நான்கு மாதம் களஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும்,106 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர், காற்று ,அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளை அறிவியல் பூர்வமான சான்றிதழ்களுடன் அறிக்கையாக கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புகளையும், புதிய ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்து விரிவான அறிக்கையாக கொடுத்துள்ளதாக பேராசிரியர் இஸ்மாயில் கூறினார்.
காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டி எண்ணெய் எரிவாயு எடுக்கப்பட்டதால் அப்பகுதியில் நிலம் மற்றும் நீர்வளம் மாசடைந்துள்ளதாகவும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கழிவுகளைக் கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் இருந்ததையும் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அறிவியல் பூர்வமான ஆய்வின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம் நீர் காற்று இப்பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்புகளின் தன்மையை அறிக்கையாக கொடுத்துள்ளதால் இஸ்மாயில் தெரிவித்தார்.
பவர்பாயிண்ட் வடிவில் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழக அரசுக்கு விளக்கவும் திட்டமிட்டுள்ளதாக இக்குழுவின் தலைவர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்